Monday 27 December 2010

பாரம்பரிய ஜோதிடம்


இந்திய ஜோதிட முறையானது மிக தொன்மையானது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒருவருடைய ஜனன ஜாதகத்தை வைத்து அவருடைய எதிர்காலத்தை எந்த அளவு கூறமுடியும் என்பதற்கு தமிழ் பாரம்பரிய ஜோதிட முறையானது பல்வேறு காலங்களில் பல்வேறு விதமான அளவுகோலினை தீட்டியுள்ளது. இந்த ஜோதிடம் வானியல், காலநிலை, கால கணக்கீடுகள் போன்றவற்றை உள்ளடக்கியது. பண்நெடுங்காலத்திற்கு முன்னரே நமது முன்னோர்கள் அறிவியலில் மிக உன்னதமான நிலையில் இருந்ததை இந்த ஜோதிட முறை மூலமாக நாம் உள்ளங்கை நெல்லிக்கனியென தெரிந்துகொள்வது வெள்ளிடையாகும். 

     இந்திய ஜோதிட முறைகளில் காணப்படும் ஒன்பது கிரகங்கள், பன்னிரண்டு ராசிகள், மற்றும் இருபத்தேழுநட்சத்திரங்கள் ஆகிய அனைத்துமே உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் காணப்படும் பொதுவான, மாறுபாடில்லாத ஒரு பால பாடமாகும். 

உழுதுண்டு வாழ்வரே வாழ்வார் மற்றோரெல்லாம் 
தொழுதுண்டு பின்செல் வார். 

                                     ______ திருவள்ளுவர் __________

என்ற பொய்யாமொழி புலவர் வாக்கின்படி நாம் கொண்டுள்ள ஜோதிட முறைகளையே உலகில்லுலோர் அனைவரும் பின்பற்றுகின்றார்கள் என்றால் அது மிகையாகது. அதனால் தான் நாம் ஜோதிடம் ஜாதகம் பிறந்த குறிப்பு போன்ற இவைகளையும் கடந்து, அஷ்டமங்கள பிரசன்னம், தேவ பிரசன்னம், தாம்பூல பிரசன்னம், சாமக்கோள் ஆருடம், நிமித்தம், பிரசன்ன நிச்சயம், முகூர்த்த நிச்சயம், போன்ற பல படிகளை கடந்து நிற்கின்றோம். ஆனால் ஏனையோர் அனைவருமே நம்முடைய தொடக்க நிலையிலேயே இன்னமும் நிற்கின்றார்கள், என்பதே உலகியல் உண்மையாகும்.

தமிழ் பாரம்பரிய ஜோதிட முறைகளை உங்களின் மேலான பார்வைக்கு வைப்பது:

திண்டுக்கல் ப.சின்னராஜ் ஜோதிடர்.

தொடர்புக்கு:    a9842108500@gmail.com           Skype Id: astrochinnaraj    Cell: 9842108500  (INDIA)


DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER VIDEO 001 







No comments:

Post a Comment