Monday 27 December 2010

திருமண பொருத்தம்

      பொருத்தம் பார்த்துத்தான் திருமணம் செய்யவேண்டுமா ? பொருத்தம் பார்த்து


 திருமணம் செய்த எல்லாருமே நன்றாகத்தான் உள்ளார்களா ? ஜாதகம் ஜோதிடம் 


போன்றவற்றை பார்க்காமல் திருமணம் செய்தவர்கள் சிறப்பாக இல்லையா ? காதல் 


திருமணம் செய்பவர்கள் நன்றாக இல்லையா என்பதெல்லாம் எல்லோருடைய மனதிலும் 


எழும் கேள்வியாகும். திருமண பொருத்தம் பார்ப்பதன் முக்கியத்துவம் என்ன ? 


என்பதைப்பற்றி விளக்குவதே இந்த பதிவின் நோக்கமாகும்.





                                         

      நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது இடது புறமாகவே செல்லவேண்டும் என்பது பல நாடுகளில் உள்ள ஒரு சாலை விதியாகும். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஏன் வலது புறமாக சென்றால் நாம் நம்முடைய இடத்திற்கு செல்ல முடியாதா என்றால் முடியும். ஆனால் ஆபத்து என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிடும். இடது புறம் செல்வது என்பது வலது பக்கம் செல்வதைவிட பாதுகாப்பானதாகும் இதில் ரிஸ்க் குறைவாக இருக்கும். இந்த பாதுகாப்பு என்பதை ஜோதிட ரீதியாக கண்டு சொல்வதே பொருத்தமாகும். இதன் மூலம் ஒரு வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதை நம் முன்னோர்கள் தெளிவாக எடுத்து காட்டியுள்ளனர்.

                      அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது - அதிலும்,
                      கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அதனினும்  அரிது 
                                                        ________________ ஒவ்வையார் ______________

என்ற மூதுரைக்குஏற்ப, வாழும் வளமான வாழ்க்கையை மேலும் செம்மையாக அமைத்துக்கொள்வது ஜோதிடத்தின் துணை கொண்டு மிக எளிதானதே. தனிப்பட்ட ஒரு மனிதனை பார்க்காமலே அவனுடைய பிறப்பு வளர்ப்பு கல்வி குணநலன்கள் போன்றவற்றை அவனுடைய ஜாதகத்தை வைத்தே பலன் சொல்வது என்பது உலகில் உள்ள எந்த அறிவியல் விற்பன்னாராலும் முடியாத ஒன்றாகும். ஆனால் நம்மவர்கள் கெப்ளரும், கலிலியோவும் சொன்னால் ஏற்றுக்கொண்டு அதையும் பாடமாக படிப்பார்கள்,  நமது சித்தர்களும், முனிவர்களும் பன்னேடுன்காலத்திர்க்கு முன்னரே எந்தவிதமான அறிவியல் சாதனங்களும் இல்லாமல், தங்களுடைய தவத்தினால் கண்கொண்டு அறிந்தவற்றை நமக்கு பரிபாடல் வழியாக சொல்லிச்சென்றதை நாம் ஏற்றுக்கொள்ளவுமில்லை, அதை கண்டு உணர்தவர்களை மதிப்பதும் இல்லை. இதற்க்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால் மற்றவர்கள் சொன்னதைப்போல் இல்லாமல் நம் நாட்டு அறிஞர்கள் பரிபாஷைஆக சொல்லிச்சென்றுள்ளனர். இதன் காரணம் தகுதியனவர்களுக்கு மட்டுமே புரியவேண்டும் என்பதாலேயாகும். முதன் முதலாக பூமி முதலான கோள்கள் அனைத்துமே சூரியனை சுற்றி வருகின்றன என்று அறிவித்து கல்லடி வாங்கி விஷம் கொடுத்து கொல்லப்பட்ட அறிவியல் அறிஞன் சொல்வதற்கு முன்பே நமவர்கள் கோள்கள் சூரியன் மட்டுமல்ல ராகு கேது என்ற இரண்டு நிழல்களையும் கண்டுபிடித்து அவைகளுக்கும் பெயர் வைத்து அவைகளுடைய சஞ்சாரங்களையும், சலனங்களையும் நிமிடக்கனக்கு உள்ளபட எடுத்து சொல்லிவிட்டார்கள். இவைகளை பற்றி நாம் இன்னொரு பதிவில் பார்க்கலாம். தற்போது திருமண பொருத்தம் எவ்வாறு பார்க்கப்படுகின்றது என்பதை பார்க்கலாம். கீழே உள்ள திருமண பொருத்தம் என்பதை கிளிக் பண்னவும். ஒளிக்கட்சியாக உங்கள் கண் முன்னே திருமண பொருத்தம் விரியும்.


                                                             Marriage Matching 

                                                 


           
                   

No comments:

Post a Comment